Header Top Ad
Header Top Ad

கோவிலை வற்புறுத்தி திறக்க வைத்தா பிரார்த்தனை? பேரூர் விஷயத்தில் அண்ணாமலை காட்டம்!

கோவை: பேரூர் கோவிலில் அதிகாரி நேரத்தை கடந்து சென்று வழிப்பட்டது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக பதிலளித்துள்ளார்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள COINDIA அரங்கில் லகு உத்யோக் பாரதி நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், இந்த லகு உத்யோக் பாரதி அமைப்பு ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்துள்ளது மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் இதற்கு முன்பு பெரிய தலைமை பண்பு கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார். 140 கோடி மக்கள் தொகையை சீனா தொட்டுவிட்டு தற்போது கீழே வந்துவிட்டது ஆனால் நம் நாடு 140 கோடி மக்கள் தொகை தொட இருக்கிறது என்றார்.

Advertisement

தொழில் புரட்சி அமைந்த பிறகு இந்தியா பெருதளவில் வளர்ந்து வருகிறது என்றும்
இன்று நாம் லோயர் மிடில் கிளாஸ் வரை உள்ளோம் வருங்காலத்தில் அப்பர் மிடில் கிளாஸ் ஆக மாற வேண்டும்,
அடுத்த பத்தாண்டு காலம் இந்த நாடு நம்பிக்கையாக பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
சீனாவிற்கு ஈடு கொடுத்து நிற்க வேண்டிய அவசியம் தொழில்துறையினரான உங்களுக்கு உள்ளது, மைக்ரோவில் நாம் சற்று குறைவாக தான் இருக்கிறோம் அதனை முன்னே கொண்டு வர வேண்டும் என்றார்.

அரசு மட்டுமே Access To capital என்பது மாறி Private also Access To Capital என மாறியுள்ளது
லகு உத்யோக் பாரதி தனி Investment அமைக்க வேண்டும் ,சைனாவை தாண்ட வேண்டுமென்றால் அரசால் மட்டுமே முடியாது அரசு ஓரளவு தான் செய்யும் என கூறிய அவர், அனைத்தையும் அரசே செய்ய வேண்டுமென்றால் கம்யூனிஸ்ட் அரசாகிவிடும் என்றார். மேலும் இங்கு படித்த
அனைவரும் அமெரிக்கா சென்றால் இந்தியா எப்படி முன்னேறும்? ரிக்ஸ் எடுக்க தற்போது மாணவர்கள் தயாராக இல்லை ரிக்ஸ் எடுத்து தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று தெரிவித்த அவர் அதற்கு தொழில்துறையினராகிய நீங்கள் மாணவர்களை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மாணவர்கள் படித்து முடித்தவுடன் ரிஸ்க் எடுத்து ஒரு சிறிய நிறுவனத்தை இங்கு அவர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

25 கோடி பேரை MSME க்கு கொண்டு வரப் போகிறோம். அவர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டு விடக்கூடாது
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வேலைவாய்ப்பு அதிகமாக வேண்டுமே தவிர செயற்கை நுண்ணறிவாள் குறைந்து விடக்கூடாது என்றார். MSME யில் வேலை வாய்ப்பு போகாமல் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். யார் தடுத்தாலும் வளர்ந்த நாடாக இன்னும் 20 ஆண்டுகளில் மாறப் போகிறோம்,வளர்ச்சி இருக்கும், வேலை வாய்ப்பு இருக்காது என இல்லாமல் , வேலை வாய்ப்புடன் வளர்ச்சி இருக்கும் வகையில் நமது வளர்ச்சி இருக்கும் என்றார்.

தொழில்துறையில் சைனாவை அடிக்க வேண்டும், சைனாவை தாண்டி நாம் போக வேண்டும் என்றால் அரசு ஒரு அளவு தான் உதவி செய்ய முடியும் என்றார். அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றால் அது கம்யூனிஸ்டு கவர்மெண்ட் ஆகிவிடும் என கூறிய அவர்
அரசு ஒரு படி சென்றால் நாம் ஒரு படி செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், லகு உத்யோக் பாரதி துறையினரின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். டி என் பி எஸ் சி யில் சிலபஸ் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறி இரண்டு கேள்விகளின் புகைப்படம் காட்டினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வேறு காலகட்டத்தில் இருந்த தமிழ் சொற்றொடர்களில் வந்திருக்கக்கூடிய வார்த்தைகள் எனவும் தெரிவித்தார்.

சிலபஸில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் பொழுது தான் மாணவர்களின் திறனை கண்டறிய முடியும் எனவும் தெரிவித்தார். குரூப் நான்கு தேர்வுகள் முடிந்த பிறகு விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்ட விதங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் தெரிவித்தார். எனவே தேர்வு முறையும் முறையாக இல்லை விடைத்தாள் பாதுகாப்போம் முறையாக இல்லை என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு என கூறினார். மத்திய அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் ஏதேனும் சிலபஸ்க்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

எங்களைப் பொருத்தவரை துணை ஜனாதிபதியாக ஒரு நல்லவர் வந்தால் மகிழ்ச்சி என்றும் தன்கர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறி உள்ளார் என்றும் உரிய அவர், தமிழர் யாரேனும் வந்தால் சந்தோஷம் இந்தியாவில் யார் நல்லவர்கள் வந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.

பேரூர் பட்டீஸ்வரன் கோவிலில் எஸ்பி பாண்டியராஜன் வந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அவ்வாறு வருவது தவறு என்றும், கோவிலை வற்புறுத்தி திறக்க வைத்து கடவுளிடம் என்ன பிராத்தனை செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அறநிலையத்துறையின் கையில் இன்புளூயன்ஸ் இருந்தால் மூடப்பட்ட கோவில் கதவை திறந்து இரவு நேரத்தில் கூட சாமி கும்பிடலாமா? என கேள்வி எழுப்பிய அவர் இதுவே சாதாரண மனிதர்கள் வரிசையில் நின்று இறந்து விட்டால் அமைச்சர் சேகர்பாபு, திருப்பதியில் 18 மணி நேரம் நிற்கிறார்கள் இந்த 4 மணி நேரம் தான் இருக்கிறார்கள் எனக் கூறுவார் என சாடினார். அறநிலையத்துறை இதில் யாரெல்லாம் துறை போய் இருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சாமியே தரிசனம் செய்த நபர் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு அதிமுக ஆட்சி வந்த உடன் பட்டா வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், எச் ராஜா தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறார், இது சம்பந்தமாக பல இடங்களில் அவர் பேசியும் இருக்கிறார் எனக்கு கூறிய அவர் கோவில் சொத்துக்களை எல்லாம் மீட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்றும் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டது என்றும் கோவில் நிலங்களில் இருப்பவர்களை வரைமுறைப்படுத்துவதற்கு ஒரு வழிமுறை உள்ளது என்றும் கூறினார்.

இன்றைய தினம் அதிமுக ஒரு பிரச்சினையை முன் வைத்துள்ளது ஆனால் அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரை ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை எத்தனையோ ஜாம்பவான்கள் வைத்துள்ளார்கள் அதனை முதலில் புடுங்க வேண்டும், ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாடகை திறந்து வருகிறார்கள், அதனையும் வாங்க வேண்டும் 99 ஆண்டுகளாக வாழவே இயற்றப்படாத இடங்கள் எல்லாம் உள்ளது அதனையும் மீட்க வேண்டும் என தெரிவித்த அவர் இதை பற்றி அதிகாரப்பூர்வமாக பாஜக மாநில தலைவரும் எச் ராஜாவும் எடுத்துக் கூறினால் சிறப்பாக இருக்கும் என பதிலளித்தார்.

20 சீட்டுகள் ஜெயிக்க கூடிய கட்சி(திமுக) எதற்காக சர்வே நடத்த வேண்டும் என்றும் இதற்கு முன் திமுக படுதோல்வி அடைந்ததும் நமக்கு தெரியும் என்றார். முதல்வர் கிராமங்களில் இரண்டு நாட்கள் தங்கி கிராம மக்களுடன் பேசினாலே தெரிந்து விடும் என கூறிய அவர் இந்த நேரத்தில் முதலமைச்சரை பற்றி பேசுவதற்கு விரும்புவதில்லை அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் என்னதான் சர்வே எடுத்தாலும் திமுக தோல்வி அடையும் எனவும் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர், அண்ணாமலை அரசியலில் மிக உயரத்திற்கு வருவார் என்று கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு சூப்பர் ஸ்டாரின் சகோதரர் கருப்பா சிவப்பா கூட எனக்கு தெரியாது என்னை அந்த வம்பில் மாட்டி விடாதீர்கள் என்றார். நடிகர் விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார் கடுமையான பணி செய்ய வேண்டும் என்று வந்தால் வெற்றி தோல்வி அவரது கையில் தான் உள்ளது என்றும் அவரது உழைப்பை பொறுத்து தான் மக்களும் வாக்களிக்க போகிறார்கள் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்த அவர் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என தெரிவித்தார். எந்த கட்சியும் தரம் தாழ்ந்து போய் விடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை மக்கள் மன்றத்தில் வாக்குறுதிகளை முன் வைக்கட்டும் என தெரிவித்தார்.

பாஜகவில் தற்போதுள்ள பொறுப்பை விட வேறென்ன இருக்கப் போகிறது நிம்மதியாக தொண்டராக இருக்கிறோம் கட்சி கொடுக்கக் கூடிய வேலைகளை செய்கிறோம் கட்சியில் புதிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் மாநில தலைவராக இருந்த பொழுது என்ன பணி செய்தேனோ அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறேன் என தெரிவித்தார். தலைவர்கள் இருப்பதால் பத்திரிக்கையை அதிகமாக சந்திப்பதில்ல எனவும் தெரிவித்தார். கட்சி எப்பொழுது முடிவெடுக்கிறது அப்பொழுது எனக்கு பதவிகளை வழங்கட்டும் என தெரிவித்தார்.

கூட்டணி குறித்து டிடிவி தினகரன் பேசிய கருத்துக்கு பதில் அளித்த அவர், இதற்கு நான் ஏதேனும் கூறினால் தேவையில்லாத பஞ்சாயத்தில் முடியும் இது சம்பந்தமாக எங்களுடைய தலைவர் பேசிக் கொள்ளட்டும் பொறுத்திருங்கள் சரியான நேரத்தில் அனைவரும் பேசுவார்கள் என தெரிவித்தார். கூட்டணி முழுமையான வடிவம் பெற வேண்டும் என்றும் புதிய கட்சிகள் வர வேண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேற வேண்டும் இது எல்லாம் நடக்கும் இன்னும் தேர்தல் காண சூடு ஆரம்பிக்கவில்லை அது வரும் பொழுது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு முழுமையான வடிவத்தில் இருக்கும் என்பது என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை என தெரிவித்தார்.

காமராஜர் ஆட்சியை முடிக்கும் பொழுது கூட தமிழகம் முதலில் தானே இருந்தது எம்ஜிஆர் ஆட்சி முடியும் பொழுதும் தமிழகம் முதலில் தானே இருந்தது என கூறிய அவர், திமுகவினர் அவர்களது திமுக கட்சியை தோன்றிய பிறகு தான் சட்டை போட்டுக் கொண்ட நாகரீகமாக இருக்கிறோம் என்பது போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். திமுக ஆட்சி வந்த பிறகு தமிழகத்தின் தொழில் துறை கீழே செல்ல துவங்கி விட்டது என்றும் உத்திரபிரதேசம் கடந்த ஆண்டு தமிழ்நாட்ட தமிழ்நாட்டை விட அதிகமான ஸ்டார்ட் அப் களை உருவாக்கியுள்ளார்கள் என்றும் தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த மாநிலங்கள் நம்மை முந்தி சென்று விடுவார்கள் என தெரிவித்தார்.

கோவையில் இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறுகுரு நிறுவனங்களில் பணி செய்து ப்ராஜெக்ட்டுகள் செய்ய வேண்டும் எனவும் அவர்களை பட்டையை தீட்டு வெளியே அனுப்பினால் இன்ஜினியரிங் கல்வி முழுமை பெறும் என்ற கருத்தை முன் வைத்ததாகவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் மக்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்த அவர் எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் மன்றத்தில் ஒரு கருத்தை முன் வைத்தால் அதனை மக்கள் கேட்க வேண்டும் இதையெல்லாம் ஆரோக்கியமான விஷயமாகத்தான் பார்ப்பதாக தெரிவித்தார்.
பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்து வருகிறது என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், TFR டேட்டா படி அதனை முன் வைத்ததாக கூறினார்.

ஒருபுறம் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் நம்முடைய மக்கள் தொகையும் குறைய ஆரம்பிக்கும் பொழுது வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என்றும் தெரிவித்த அவர் படித்தவர்கள் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் இதை நான் கூறினால் சண்டைக்கு வந்து விடுவார்கள் என தெரிவித்தார். ஒரு மாநிலம் வளர வளர இந்த பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்றும் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை நாம் பத்து ஆண்டுகளில் மாற ஆரம்பிக்கும் அதற்கு நாம் தயாராக வேண்டும் அரசியல்வாதிகளும் இதைப் பற்றி பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியின் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு தான் இருந்தார்கள் எனவும் நான் தொண்டராக இருந்து கொள்கிறேன் என் சார்பில் தலைவர்கள் யார் கலந்து கொள்ள வேண்டுமோ அவர்கள் கலந்து கொண்டார்கள் என தெரிவித்தார். அதேசமயம் கட்சி என கழித்த வேலையை செய்து கொண்டே இருந்ததாகவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அமித்ஷா அறிவித்துவிட்டு சென்றுவிட்டார் எனவும் இதில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்தார். முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி பிரதிநிதிகள் தாமாகவே ராஜினாமா செய்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அப்படி என்றால் திமுகவில் உள்ள அனைவரும் ராஜினாமா தான் செய்ய வேண்டும் என பதில் அளித்தார். திமுகவில் உள்ள அனைத்து கேபினெட்டுகளும் ராஜினாமா செய்ய வேண்டும் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதை அவரது மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து DMK பைல்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பவன் நான், என்றும் இதனை எல்லாம் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போலி கணக்குகள் தமிழ்நாட்டில் இருப்பது உண்மைதான் என்றும் அதில் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு பஞ்சாயத்துகளை ஆதாரமாக மத்திய அரசு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிதாக வரக்கூடிய துணை ஜனாதிபதி முக்கியத்துவம் ஐந்தாக இந்த ஆண்டுகளில் இருக்கப் போகிறார் அப்படி இருக்கும் பொழுது அதிக மாணவர்களின் பெயர்கள் கூறப்படுகிறது பொறுத்திருப்போம் நல்ல ஒரு பெயர் வரும் தமிழ்நாட்டில் இருந்து வந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி இந்தியாவில் இருந்து நல்லவர் யார் வந்தாலும் மகிழ்ச்சியான தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles