கோவையில் புதிதாக அமைய உள்ள மதுக்கடை- பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை: கோவையில் புதிதாக அமைய உள்ள FL2 நவீன மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் படிபடியாக அரசு மதுக்கடைகளை அடைத்து முழு மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 100 சதவிகிதம் கூடுதலாக FL2 என்ற நவீன மதுக்கடைகளை திறந்து வருகிறது.

Advertisement

அதன் ஒருபகுதியாக கோவை மதுக்கரை அரிசிபாளையம், மலும்பிச்சம்பட்டி சாலையில் புதிதாக FL2 நவீன மதுக்கடை அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு செய்து வருகிறது. அந்த பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மார்க் கடை உள்ளதால் மீண்டும் புதிதாக ஒரு மதுக்கடை அமைப்பதற்க்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்பொழுது அமைய உள்ள கடையை சுற்றிலும் 7 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருப்பதாகவும், எற்கனவே இருக்கும் மதுக்கடைகளால் இங்கு பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகாரளித்த மக்கள், உடடனடியாக புதுதாக அமைய உள்ள மதுக்கடையை ரத்து செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சரக்கு வாகனம் மீது விழுந்த மரம்- ஒருவர் படுகாயம்…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...