உதவித் தொகையுடன் கோவை பெண்களுக்கு அரசு வழங்கும் இலவச தொழிற்பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க!

கோவை: மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.

நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

52 வயது வரை உள்ள பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டுக்கு கற்றுத்தரப்படும் பயிற்சிகள்:

  • Computer Operator
  • Programming Assistant (COPA)
  • Desktop Publishing Operator (DTPO)
  • IoT Technician (Smart Health Care)
  • Sewing Technology
  • Instrument Mechanic (IM)
  • Electronics Mechanic (EM)
  • Information Technology (IT)
  • Technician Medical Electronics (TME)
  • Smart Phone Technician Cum App Tester

பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.

Advertisement

அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்படும் நன்மைகள்:

மாதம் தலா ரூ.750/- உதவித்தொகை. மிதிவண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள். 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பஸ்பாஸ்

மேலும், புதுமைப் பெண் திட்டம் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மகளிருக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மகளிருக்கும் கூடுதலாக மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.

நவீன தொழிற்திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் Industrial Visit, Inplant Training, Internship Training வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
98651 28182, 94990 55692, 88381 58132, 94422 39112

இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த தகவலை உங்கள் சுற்றுவட்டார மகளிருக்கு பகிர்ந்து உதவிடலாம்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

TVK வெற்றியை கொண்டாடிய கோவை வழக்கறிஞர்கள்…

கோவை: தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சியின் வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதில் 108 தொகுதிகளில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...