கோவையில் சாலை விபத்தில் பெண் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

கோவை: சாலை விபத்தில் கோவை காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை ஏற்றி வந்த ஈச்சர் வேனை பார்த்து வாகனத்தை நிறுத்த முயன்றதாக தெரிகிறது.

அப்போது ஈச்சர் வாகனத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சுந்தராபுரம், கிணத்துக்கடவு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...