கரூர் தவெக விவகாரம்- புறப்பட்ட பாஜக ஆய்வு குழு

கோவை: கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விசாரணை மேற்கொள்ள பாஜக ஆய்வு குழு புறப்பட்டது.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு கரூரில் நிலைமையை ஆய்வு செய்ய வந்து உள்ளது.
இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

கரூர் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த செய்தியாளர்களை அக்குழுவினர் சந்தித்தனர். அப்போது பேசிய ஹேமமாலினி, கரூரில் நடந்த துயரமான விபத்து குறித்து கேட்டறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்து உள்ளோம் என்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க உள்ளோம் என்றும் பின்னர், நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும், என்றார்.

Advertisement

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நாங்கள் இதுவரை அவரைச் சந்திக்கவில்லை. எட்டு பேர் கொண்ட எங்கள் குழு நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க இருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்திப்போம், என்று குழு உறுப்பினர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...