கோவை: தொண்டாமுத்தூரில் இரண்டு தினங்கள் கல்லூரி சந்தை நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 09.10.2026, 10.10.2026 மற்றும் 12.10.2026 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் உள்ள ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கல்லூரி சந்தை நடத்தப்பட உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 40 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரித்த கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள், மூலிகைப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் நெய் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
எனவே, அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





