கோவை: ஆனைமலை வட்டத்தில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாஹின் அயுபக்கர். கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோட்டூர் பேரூராட்சி நெல்லித்துறை மன்னம் பகுதியில் தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 46 பழங்குடியினர்களுக்கான குடியிருப்பினை பார்வையிட்டு, குடியிருப்பின் அளவு. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் அளவு தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பயன்பாட்டிற்கு ஒப்படைக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அங்காலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் மற்றும் அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் மகளிர் உதவிக்குழுவினர் கேக் காரம் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் தயாரிக்கும் கிடங்கினை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், விற்பனை மற்றும் தயாரிப்புகள் குறித்து சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிரிடம் கலந்துரையாடி, கேட்டறிந்தார்.






