மக்காச்சோளத்தின் முன் விதைப்பிற்கான விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மக்காச்சோளத்தின் முன் விதைப்பிற்கான விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மக்காச்சோளத்தின் தேவையானது ஊட்டச்சத்து மற்றும் வர்த்தக ரீதியின் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது. மேலும் கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் தொழிலகப் பயன்பாடு, எத்தனால் பயன்பாடுஉயிர் நெகிழி உபயோகம் போன்ற காரணிகளால் முக்கிய வர்த்தக பயிராக மக்காச்சோளம் விளங்குகிறது.

Advertisement

இந்திய அரசாங்கத்தின், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் மூன்றாவது மதிப்பீட்டின்படி 2025-26 ஆம் ஆண்டில் மக்காச்சோளம் 10.74 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 55.10 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பானது இயல்பை விட தாழ்ந்த தென்மேற்கு பருவமழை பொழிவு, மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்படும் மாநிலங்களான கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் நிலவும் என்பதால்இது பரப்பு மற்றும் உற்பத்தியை மட்டுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த காலநிலை காரணிகள் மற்றும் சென்ற ஆண்டின் அதிக மக்காச்சோள உற்பத்தியினை மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தககங்களால் நடுநிலைப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில், கடந்த 2025 26 ல் சுமார் 0.54 மில்லியன் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு 3.3 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது நம் மாநிலத்தின் தேவையில் சுமார் 50 சதவீதம் மட்டுமே எஞ்சிய தேவைக்கு பிற மாநிலங்களின் இறக்குமதியையே தமிழகம் நம்பியுள்ளது. சேலம். நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவு மையம், உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை சந்தையில் கடந்த 15

ஆண்டுகளான நிலவிய மக்காச்சோள விலைகளை ஆய்வு செய்து. சந்தை ஆய்வும் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அறுவடை காலத்தில் நல்ல தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,200 முதல் ரூ.2,400 வரை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தகுந்த விதைப்பு முடிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் -641003

தொழில்நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
போராசிரியர் மற்றும் தலைவர்,
சிறுதானிய துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். ஆகும்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...