கோவையில் பிரதம மந்திரி விகாஸ் திறன்மேம்பாடு பயிற்சிகள்…

கோவை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிரதம மந்திரி விகாஸ் திறன்மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிரதம மந்திரி விகாஸ் திறன்மேம்பாடு பயிற்சிகள் வழங்கபட உள்ளது.

சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்காக மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நபார்டு ஆலோசனை சேவைகள் கழகம் மற்றும் பெங்களூரு ஆதித்யா உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் பிரதம மந்திரி விகாஸ் திறன்மேம்பாடு பயிற்சிகள் மூலமாக எண்ணிம வேளாண் விரிவாக்க மேம்பட்டாளர் (Digital Agricultural Extension Promoter), மலரியல் வித்தகர்கள் (Floriculturists) மற்றும் அங்கக சாகுபடியாளர் (Organic Grower) ஆகிய பணிப்பிரிவுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி சான்றிதழ் வகுப்புகளில் சேர்ந்து பயிலுவோருக்கு மாதம் ரூ.2000/- உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி காலம் 75 முதல் 105 நாட்கள் வரை நடைபெறும்பயிற்சி நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 6 மணி நேரம் முதல் அதிக பட்சம் 8 மணி நேரம் வரை நடைபெறும் பயிற்சியாளர்கள் தங்கள் இல்லத்திலிருந்து அருகிலுள்ள பயிற்சி மையத்திற்கு வந்து சென்று பங்கு கொள்ளலாம். உணவு, உறைவிட வசதி இல்லை.

Advertisement

வயது வரம்பு 14 முதல் 45 வரை. மகளிருக்கு 33 விழுக்காடு முன்னுரிமை வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் நலிந்தவர்கள் மற்றும் மாற்று திறனாளி பொதுமக்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்டும். பயிற்சி வகுப்புகள் ஜூலை 3-வது அல்லது 4-வது வாரம் முதல் துவங்கும்.

விருப்பமுள்ளவர்கள் மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் +91 9443572956 மற்றும் +91 9790132744, இந்த எண்களுக்கு வாட்ஸஅப் செய்தும் விபரங்கள் பெறலாம். சிறுபான்மையினர் சமூகத்தினர் மற்றும் முன்னுரிமை பொதுபிரிவினர் நலனுக்கான இந்த அறிய வாய்ப்பை நழுவவிடாமல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...