ஆடி வெள்ளி- கோவையில் பாம்பு புற்று வேப்பிலை வனம் போன்று அலங்கரிக்கப்பட்ட மாகாளியம்மன் கோவில்

கோவை: ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவில் நவதானிய ராகு கேது சர்ப்பங்களாலும், வேப்பிலை வனத்தாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

ஆடி மாதம் துவங்கியது முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி நான்காவது ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை தேர்முட்டி- பெரியகடை வீதி சாலையில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த வாரம் ராகு கேது சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு கோவில் முழுவதும் சர்ப்பங்களாலும் வேப்பிலை வனத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கோவில் நுழைவாயில் பாம்பு புற்றுப்போல் வடிவமைக்கப்பட்டு பக்தர்கள் அதற்குள் நுழைந்து கோவிலுக்குள் செல்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement

அதுமட்டுமின்றி ராகு கேது சிறப்பு பூஜையை குறிப்பிடும் வகையில் கோவில் நுழைவாயிலில் இருந்து சன்னிதானம் வரை 108 அடி கொண்ட நவதானியங்கள், கடல் சிற்பிகளால் ஆன ராகு கேது சர்ப்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

மாகாளியம்மன் சர்ப்பத்தின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ராகு கேது சர்ப்பத்தை வழிபட்டு பின்னர் அம்மனை வழிபட்டனர்.

Advertisement

ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்காக இந்த வாரம் ராகு கேது சர்ப்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உக்கடத்தில் பயங்கரம்; ஆயுதங்களுடன் வீட்டைச் சூழ்ந்த கும்பல்… 5 பேர் கைது

உக்கடம் பகுதியில் நள்ளிரவில் வாலிபரின் வீட்டை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.