கோவை: மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர்க்கை நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர்கள் சேர. நேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.06.2026 வரை மேற்கொள்ளப்பட்டது தற்போது அது 31.07.2026 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் Computer Operator & Programming Assistant (COPA), Desktop Publishing Operator (DTPO) IoT Technician (Smart Health Care தொழிற்பிரிவுகளும், ஈராண்டு பயிற்சியில் Instrument Mechanic (IM) Electronics Mechanic (EM), Information Technology (IT) Technician Medical Electronics (TME) தொழிற்பிரிவுகளும், ஆறு மாத பயிற்சியில் Smart Phone Technician cum App Tester தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Sewing Technology பிரிவில் சேர 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.
மாணவியர்கள் தங்களின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண். இமெயில் ஐடி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் அரசு தொழிற்பயிற்சி தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோவையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.ஐ G Pay அல்லது நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750மற்றும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000உதவித் தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை-2 sets சீருடைக்கான தையல் கூலி, காலணி மற்றும் வரைபடக் கருவிகள் விலையில்லாமல் வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு. அப்பரண்டிஷிப் பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 மற்றும் உச்ச வயது வரம்பு எதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் எதும் வசூலிக்கப்படுவதில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.07.2026 ஆகும். கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.
98651 28182, 94990 55892, 88381 58132, 94422 38112 ஆகிய எண்கள் ஆகும்.


