கணவர் கண்முன்னே மனைவி பலி! கோவையில் கோர விபத்து!

கோவை: கோவையில் கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது பைக் மோதிய விபத்தில், கணவர் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கரும்புக்கடை ஆப்பிள் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் புரோஸ்கான் (42). இவரது மனைவி ஜன்னத்தில் பிரதோஸ் (37). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் போத்தனூர் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது, போத்தனூர் சாலையில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது. பைக்கை போத்தனூர் பரத் நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (19) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

Also Read: நாய் குரைத்தும் அலட்டிக்கொள்ளாத காட்டு யானை! உணவு தேடிய சுவாரஸ்யம்!- VIDEO

Advertisement

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணம் செய்த புரோஸ்கான் மற்றும் அவரது மனைவி ஜன்னத்தில் பிரதோஸ் ஆகியோர் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜன்னத்தில் பிரதோஸுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே தனது கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே நேரத்தில், ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற புரோஸ்கான் மற்றும் விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரன் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Advertisement

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து, விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண், சாலை விபத்தில் அவரது கண்முன்னே உயிரிழந்த சம்பவம் கரும்புக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...