கோவை: இந்தியாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் தனது 86வது கிளையை மேட்டுப்பாளையத்தில் தொடங்கியுள்ளது.
இந்த புதிய கிளை தொடக்க விழாவில், ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் நிறுவனர் டாக்டர் எஸ். சந்திரலேகா, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் என். சுனில் ஆனந்த் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) பொருளாளர் டாக்டர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மையத்தைத் திறந்து வைத்தனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்தரிப்பு மருத்துவத் துறையில் அரிய சேவையாற்றி வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம், இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தம்பதியினருக்கு குழந்தை பேறு வழங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள், சர்வதேச தரத்திலான ஆய்வகங்கள் மற்றும் அனுபவமிக்க முன்னணி மருத்துவர்களுடன் இம்மையம் செயல்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் IVF, IUI, ICSI, கருத்தரிப்பு பாதுகாப்பு (Fertility Preservation) மற்றும் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் சிகிச்சைகள் (Advanced Laparoscopic Surgeries) போன்ற உயர்தர சிகிச்சைகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறது.
தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த அதிநவீன சிகிச்சைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இக்கிளை தொடங்கப்பட்டுள்ளது.
சலுகைகள்
புதிய கிளை தொடக்க விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் கிளையில் தம்பதியினருக்கு பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விந்தணு பரிசோதனை
ரூ.5,000 மதிப்புள்ள விந்தணு பரிசோதனை தற்போது வெறும் ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது.
விழாவன்று ஸ்பாட் புக்கிங் (Spot Booking) செய்யும் தம்பதியருக்கு இலவச ஆலோசனை (Free Consultation) மற்றும் இலவச ஸ்கேன் (Free Scan) பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேலும், IUI, IVF, ICSI ஆகிய உயர் சிகிச்சைகளுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தம்பதியருக்கு பிரத்யேக சிகிச்சை தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன.
குழந்தை செல்வத்திற்காக ஏங்கும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தம்பதியினர் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களின் மூலம் தங்களின் பெற்றோர் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





