தமிழ்நாடு பட்ஜெட் சீக்ரெட்- அமைச்சர் செங்கோட்டையன்…

கோவை: தமிழ்நாடு பட்ஜெட் என்பது சீக்ரெட் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு முதல்வரைப் பொறுத்தவரை கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ உருவாகப்பட வேண்டும் என்பதுதான் இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அதிமுகவில் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதற்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் நேரடியாக விசாரணை மேற்கொள்வதற்காக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது சட்டப்பேரவை தலைவர் அதற்கான முடிவுகளை எடுப்பார் என்று கூறினார்.

நீட் தேர்வு போராட்டம் தொடர்பான கேள்விக்கு அதுஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்வுகள் நீட் தேர்வு பொருத்தவரை எங்கள் கட்சியின் முதல்வரின் கொள்கை முடிவு அதுதான் அந்த முடிவில் முதல்வர் தெளிவாக இருக்கிறார்.

Advertisement


ஆட்சியை சரியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த உணர்வுகளை பிரதமரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக உள்ளது என்பதையும் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார் என்றார்.

நாமக்கல் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு குறைபாடுகள் இருக்கும் நம்முடைய லஞ்ச ஒழிப்புத்துறை அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் என்ன நடைபெறுகிறது என்பதை மாவட்ட வாரியாக ஒரே நேரத்தில் ஒரு துறையை ஆய்வு செய்வது அவர்களது வழக்கம் அதனை அவர்கள் செய்து வருகிறார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களது குறைகளை அந்த துறையின் செயலாளர் இடம் கூறி இருக்க வேண்டும் என்றார்.

Advertisement

மேகதாது விவகாரத்தில் தவெக நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு மேகதாது அணையை பொருத்தவரை ஒரு செங்கலை கூட அவர்கள் எடுத்து வைக்கக் கூடாது அதனை அனுமதிக்க மாட்டேன் என்பது கொள்கை முடிவு என்றார்.

சிவகாசி பட்டாசு தயாரிப்பு ஆலை வடித்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு விதிமுறைகளை மீறி இருக்கக்கூடிய எந்த பட்டாசு தொழிற்சாலைகளாக இருந்தாலும் அதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஒரு இடத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக வேறு ஒரு இடத்தில் பட்டாசு ஆலை அமைக்க ஒரு சிலர் தற்காலிகமாக அமைத்து லாபத்தை ஈட்டுகிறார்கள் அதுவும் தடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு பட்ஜெட் என்பது சீக்ரெட் பட்ஜெட்க்கு பிறகு கேள்வி கேளுங்கள் என்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...