திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் இதனை பின்பற்ற வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை: கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை அனைத்து பள்ளிகளிலும் எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் (ம) அரசு) பள்ளிகளிலும். ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கும் பொருட்டு அனைத்து பள்ளிகளிலும் கீழ்கண்ட உறுதிமொழியை எடுக்கும்படி தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி, “இந்திய குடிமகன் குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்” என்பதாகும்.

எனவே மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 15 அன்று உறுதிமொழி எடுத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...