சிறந்த சமூக சேவகர் விருதுகள் பெற விதிமுறைகள் அறிவிப்பு…

கோவை:சிறந்த சமூக சேவகர் விருதுகள் பெற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி ப்தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள்,பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை,

மொழி, இனம், பண்பாடு. கலை,அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் என்றும் https://awards.tn.gov.in என்னும் இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 19.06.2026 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...