We The Leaders அமைப்பின் முதல் நிகழ்ச்சி- கோவைக்கு வருகை புரிந்த அண்ணாமலை…

கோவை: போதையில்லா தமிழகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார்.

Advertisement

போதையில்லா தமிழகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை சென்னையிலிருந்து கோவைக்கு வருகை புரிந்தார்.

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிபட்டியில் We The Leaders அமைப்பின் சார்பில் போதையில்லா தமிழகம் என்ற மாநாடு இன்று நடைபெறுகிறது. We the Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இதுவாகும்.

ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் போதை பொருள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அது குறித்தான சிறப்புரை ஆகியவை இதில் இடம்பெற உள்ளன. இந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சி இது என்பதால் பலரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார். அவரிடம் இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கேள்விகள் செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில் எதற்கும் பதிலளிக்காமல் மாலை பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று கூறி சென்றார்.

அண்ணாமலை வந்த அதே விமானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் வருகை புரிந்த நிலையில்அவரிடமும் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர் அதற்கு வானதி சீனிவாசன் பதில் அளிக்கவில்லை.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...