கோவையில் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி- சீறிபாய்ந்த மாணவ மாணவிகள்…

கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவிகள் சீறிபாய்ந்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது சைக்கிளிங் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.

வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

நேரு விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி நடைபெற்ற போட்டியில், இலக்கை நோக்கி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் மிதிவண்டிகளில் சீறிபாய்ந்தனர். அது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டன. போட்டியை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...