கோவை: கோவை அருகே எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட l&t பைபாஸ் சாலையில் ஜெ ஜெ நகர் பகுதியில் சுமார் 40,000 லிட்டர் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திறந்த வெளிப்பகுதியில் சாலையோரம் கீழே விழுந்து விபத்திற்கு உள்ளானது.
அந்த டேங்கர் லாரியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டோங்காரி என்பவர் ஓட்டி வந்துள்ளார். தாவனகிரியில் இருந்து கொச்சினுக்கு எத்தனால் ஏற்றிச் செல்லும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் எத்தனாளை பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் பணிகளை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
எத்தனால் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் பொதுமக்கள் அங்கு நிற்க வேண்டாம் என்று காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தீ பற்றும் பொருட்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





