பேரூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: கோயமுத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோயமுத்தூர் மாவட்டம்பேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ சேவை மையம் மற்றும் ஆதார் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு அங்கு பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்அப்போது தனது மகளின் பெயரில் “மறுமணம் செய்யவில்லை” என்பதற்கான சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த கௌசல்யா என்ற மூதாட்டியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு விண்ணப்பம் விரைவாக பரிசீலிக்கப்பட்டு அச்சான்றிதழை தனது கரங்களால் மூதாட்டியிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

தொடர்ந்து, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம்பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் கோவைப்புதூர் சாலை முதல் அய்யாசாமி கோவில் சாலை வரை (சுமார் 150 கி.மீ.) நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, சாலையின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரம் அளவுகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

பின்னர், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள வெடிகாரன் குட்டை பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் எளிதாக வடிந்துசெல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

தொடர்ந்து, தீத்திபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அன்னை வேளாங்கண்ணி நகர் நியாய விலைக் கடையை நேரில் பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரத்தினையும், பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மாதம்பட்டி, குனியமுத்தூர் அணைக்கட்டு பகுதியில் சிறுதுளி அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நொய்யல் ஆறு தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தென்றல் காம்ப்ளக்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் இசேவை மையத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

தொடர்ந்து, தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் வேளாண்மை பொறியியல்துறையின் சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை தூர்வாரப்பட்டுள்ளதையும். 5.17 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி முக்கிய பகுதிகளில் 48 மணி நேர டிரோன் தடை அமல்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...