கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…

கோவை: கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

​கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

​ஆர்.டி.ஓ அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில்களைப் பூட்டி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது லஞ்சப் பணத்தை வாகனங்களில் மறைத்து வைத்து உள்ளனரா ? என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனை தீவிரமாக நடைபெற்றது .

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...