கோயம்புத்தூர் இசைக் கல்லூரியில் ஆசிரியர் உதவி பேராசிரியர் பணியிடம்- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோயம்புத்தூர் இசைக் கல்லூரியில் ஆசிரியர் உதவி பேராசிரியர்கள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Advertisement

கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027-ம் கல்வியாண்டில் குரலிசை, வீணை, தவில் நாதஸ்வரம் மற்றும் இசை இலக்கணம் துறையில் பட்டயம் இசை பயிலும் மாணாக்கர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றவும் மற்றும் குரலிசை, வயலின். வீணை பரதம், தமிழ், ஆங்கிலம், கணினி மற்றும் யோகா துறையில் இளங்கலை இசை பயிலும் மாணாக்கர்களுக்கு வகுப்புகள் நடத்தவும் தொகுப்பூதிய அடிப்படையில் உதவிப்பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் பட்டயம், இளங்கலை, இசை ஆசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் இசையில் முனைவர் பட்டம் (அல்லது) இசையில் NETSLET தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். முன்பணியறிவு அனுபவம் தேவை மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இதற்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.20,000. மட்டும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்தடைய வேண்டிய கடைசி 10.07.2026 ஆகும்.

இந்த பணியிடங்களுக்கு 14.07.2026 அன்று காலை 10.00 மணியளவில் துறை அனுமதித்த குழுவினரால் நேர்காணல் நடத்தப்படும். கல்லூரி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இயங்கும்.

Advertisement

விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி,
மலுமிச்சம்பட்டி அஞ்சல், செட்டிபாளையம் ரோடு.
கோயம்புத்தூர்-641050 ஆகும்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் அழுகை! – VIDEO

கோவையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...