கோவையில் வேளாண் தீர்வுகள் மாநாடு துவக்கம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் எதிர்கால வேளாண்மை- காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன் கொண்ட வேளாண் தீர்வுகள் மாநாடு துவங்கியது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்- காலநிலை மற்றும் பேரிடர் வேளாண் மகத்துவ மையம் (CoE-CDRA). இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைந்து “எதிர்கால வேளாண்மை காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன் கொண்ட வேளாண் தீர்வுகள்” (ICFRF-2026) என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு தொடங்கியது.

இக்கருத்தரங்கை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் முனைவர சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, தொடக்க விழா உரை வழங்கினார். முனைவர் பாலசுப்பிரமணியம், திட்ட முதன்மை ஆய்வாளர் (DST-CoE-CDRA), இயக்குநர். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநாகம் வரவேற்புரை வழங்கினார்.

இக்கருத்தரங்கின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமி விளக்கினார். விழாவில் எஸ்.எஸ். வசீகரன் (நபார்டு), பயிர் மேலாண்மை இயக்கக இயக்குநர் முனைவர் பழனிவேலன் மற்றும் ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முனைவர் ஷேக் மீரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

Advertisement

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். விஜய கோபால் ககானி மாநாட்டின் தலைமை உரையை வழங்கினார். இக்கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு வெளியிடப்பட்டதுடன், சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இம்மாநாட்டில் இந்தியாவின் 5 நாடுகள் மற்றும் இந்தியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த 33 பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளைச் சேர்ந்த 281 மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...