கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்- கோரிக்கைகள் என்ன?

கோவை: கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸிகளை முறைப்படுத்தி அரசு அனுமதி பெறாமல் உள்ள டாக்ஸி செயலிகள் டாக்ஸி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரியங்களில் பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும்

அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்கள் முறையை கைவிட வேண்டும், ஆட்டோ களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். SDTU மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்தும் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கபட்டது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...