கோவை: கோவை அருகே தனியார் பள்ளியில் மாணவியின் தலையில் பால்சீலிங் விழுந்ததால் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அருகே பன்னீர்மடை பகுதியில் இயங்கி வரும் டேக் அக்ஷயா அகாடமி சிபிஎஸ்சி தனியார் பள்ளியில் பணிகள் நிறைவடையாத பள்ளிக் கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்ற நிலையில் ஒரு மாணவியின் தலையில் பால்சீலிங் விழுந்ததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பள்ளியில் பணிகள் நிறைவடையாத புதிதாக கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்தில் மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் நடந்து வரும் நிலையில் நேற்று ஒரு மாணவியின் தலையில் பால் சீலிங் விழுந்துள்ளது.
அதனால் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டு கட்டிடப்பணிகளை முழுவதுமாக முடித்த பிறகு வகுப்புகள் நடத்தக் கோரி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தடாகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோரை அனுப்பி வைத்தனர். கோவை துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ளது பிரபல டேக் அக்ஷயா அகாடமி சிபிஎஸ்சி தனியார் பள்ளியின் கிளை,
இப்பள்ளியில் கேஜி வகுப்புகள் முதல் 12ம் வகுப்புகள் வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..





