பக்ரீத் பண்டிகை- கோவையில் சிறப்பு தொழுகை…

கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் ஐந்தாயத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

Advertisement

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இந்த ஈகை திருநாளானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள் அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தார் போல் ஏழை எளிய மக்களுக்கு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

Advertisement

அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பினர் உலகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் உலகம் அமைதி பெற வேண்டும் அனைவரிடமும் ஈகை பண்பானது மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...