கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரங்கேறிய கொடூரம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தில் போலீசார் 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடைய ஆட்சியில் அலுவலகம் அருகே உள்ள சாலையோர இட்லி கடையில் மக்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது சில இளைஞர்கள் மது போதையில் அங்கு சாப்பிட வந்துள்ளனர்.

Advertisement

அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மோதலாக மாறியது.

இந்த மோதலில் விஷ்வேஷ் என்ற இளைஞர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியனர். தகவல் அறிந்த போலீசார் கோவை ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறு ஏற்பட்ட காரணம் மற்றும் இதில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படியான சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து முனையம்- தலைமை செயலாளருக்கு கடிதம் அளித்த அமைச்சர் விக்னேஷ்…

கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் பணிகளை மீண்டும் தொடங்க தலைமை செயலாளரிடம் அமைச்சர் விக்னேஷ் கடிதம் வழங்கினார். கோவை மாநகர் வெள்ளலூர் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து முனையம் கட்டப்பட்ட நிலையில்...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.