கோவை: கோவையில் புதிதாக கட்டப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டிடம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோவை அவிநாசி சாலை கொடிசியா பகுதியில் அமைந்துள்ள கோயம்புத்தூர் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் 9.22 கோடி மதிப்பில் முதலாம் ஆண்டு அறிவியல் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இதனை இன்று முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி கோவையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் விஜய் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டிடத்தை திறந்து வைத்த பிறகு அமைச்சர் சம்பத்குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து கல்லூரி கட்டிடத்தை பார்வையிட்டார்.
கல்லூரி வகுப்பறைகள் ஆய்வகங்கள் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் சம்பத்குமார் ஆசிரியர்களிடம் இந்த கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.




