கோவையில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவை மாநகராட்சி, ஆத்துப்பாலம் மின்மயானத்தின் செயல்பாடுகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.95க்கு உட்பட்ட ஆத்துப்பாலம் மின்மயானத்தின் செயல்பாடுகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆணையாளர் அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 71க்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலையில், தூய்மைப் பணியாளர்கள்வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மத்திய மண்டலம், வார்டு எண்.47க்கு உட்பட்ட இரத்தினபுரி. சி.பி.எம். லே-அவுட் பகுதியில், சுமார் 60 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து, மரக்கன்றுகள் நடவு செய்தும், மேற்கு மண்டலம், வார்டு எண்.72க்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம். மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் அமைந்துள்ள (MICRO COMPOSTING CENTRE) நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில், தனியார் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், நவீனமயமாக்கப்பட்டு செயல்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரம் தயாரிக்கும் மைய வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்தார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...