கோவை வரும் முதல்வர் விஜய்- போக்குவரத்து மாற்றம், ட்ரோன் பறக்க தடை…

கோவை: நாளை முதல்வர் விஜய் வருகையையிட்டி கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தாராபுரத்தில் நாளை(30.09.2026) நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் விஜய், கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை வழியாக தாராபுரம் செல்ல உள்ளார்.

இதையொட்டி, முதல்வர் பயணிக்கும் சாலை, கோவை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement

அதே போல் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 30-ம் தேதி கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்லும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Advertisement

கோவை மாநகரில் இருந்து விமான நிலையம் வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு U-Turn உள்ளிட்ட மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை, V.K. ரோடு, மசக்காளிபாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.

நாளை விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள், விமான நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அன்றைய தினம் கால்டாக்ஸிகள் மற்றும் பிற வாகனங்கள் விமான நிலையத்தில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...