கோவையில் ஏ.டி.எம் கார்டை மாற்றி மோசடி: பணம் எடுக்கும்போது கவனம்!

கோவை: கோவையில் ஏ.டி.எம் கார்டை மாற்றி ரூ.17,000 பணத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை ரத்தினபுரி தையிர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் ( 46). இவருக்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது.

Power Cut Coimbatore: கோவையில் ஜூலை 14ல் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

இந்நிலையில், தனது கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக, வீட்டில் இருந்த ஏ.டி.எம் கார்டை எடுத்துச் சென்று 12,000 ரூபாய் பணம் எடுத்து வருமாறு தனது மகனுக்கு நாகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

அதன்படி, நேற்று காலை ரத்தினபுரி ராஜு நாயுடு வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு நாகராஜின் மகன் சென்றுள்ளார். அவர் பணம் எடுக்க முயன்றபோது, அங்கு நின்றிருந்த நபர் ஒருவர், உதவி செய்வது போல நடித்து, ஏ.டி.எம் கார்டை இயந்திரத்திற்குள் செலுத்துமாறு கூறியுள்ளார். அதை நம்பிய நாகராஜின் மகனும் கார்டைச் செலுத்தி ரகசிய குறியீட்டு எண்ணை பதிவிட்டுள்ளார்.

அப்போது அருகில் நின்றுகொண்டிருந்த அந்த நபர், ரகசிய எண்ணை ரகசியமாகக் கண்காணித்துக் குறித்துக் கொண்டார். தொடர்ந்து, நாகராஜின் மகனை ஏமாற்றிவிட்டு, கார்டை லாவகமாக மாற்றிக் கொண்டு கணக்கிலிருந்து 17 ஆயிரத்து 200 ரூபாயைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடினார்.

Advertisement

Also Read: NCC செய்தி எதிரொலி; கோவை மக்களுக்கு இடையூறு செய்தவர்களுக்கு போலீஸ் அபராதம்!

இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்த் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் ( 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரண்ராஜைக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 17 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணத்தை முழுமையாக மீட்டனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...