தமிழகத்தில் ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் மோசடி! உஷார் மக்களே ; விவரம் உள்ளே

கோவை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைக் குறிவைத்து, ‘பாஸ் ஸ்கேம்’ (Boss Scam) என்ற பெயரில் புதிய வகையான ஆன்லைன் பண மோசடி நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த மோசடி தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் ஊழியர்கள் சுமார் ரூ.1 கோடி வரை பணத்தை இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்கள், நிறுவனங்களின் முதலாளிகள் அல்லது உயர் அதிகாரிகளைப் போல நடித்து ஊழியர்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்காகப் புதிய தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, ஊழியர்களின் வாட்ஸ்அப் அல்லது செல்போனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

Advertisement

அந்தச் செய்திகளில், நிறுவனத்தின் முதலாளி பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அவரது புகைப்படத்தையும் வாட்ஸ்அப் முகப்புப் படமாக வைத்துக் கொள்கின்றனர்.

தொடர்ந்து, அவசரத் தேவை இருப்பதாகக் கூறி, குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு உடனடியாகப் பணம் அனுப்புமாறு ஊழியர்களிடம் கேட்கின்றனர். உண்மையிலேயே தங்களது முதலாளிதான் செய்தி அனுப்பியுள்ளார் என நம்பும் ஊழியர்கள், அந்தத் தகவலைச் சரிபார்க்காமல் பணத்தை அனுப்பிவிடுகின்றனர். பின்னர் அது மோசடி என்பது தெரியவரும்போது, அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

Advertisement

குறிப்பாக, தனியார் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனங்களின் பெயர், முதலாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைப் பயன்படுத்தி நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதால், ஊழியர்கள் எளிதில் ஏமாறும் சூழல் உருவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த வகையான மோசடி தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதுதொடர்பாக முதற்கட்டமாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் இந்த மோசடி மூலம் சுமார் ரூ.1 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நிறுவனத்தின் முதலாளி அல்லது உயர் அதிகாரி எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்தால், ஊழியர்கள் உடனடியாகப் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரியை அவருக்குத் தெரிந்த அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவலை உறுதிப்படுத்திய பிறகே பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள் மற்றும் பணம் கேட்டு வரும் குறுஞ்செய்திகள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரமாகப் பணம் அனுப்புமாறு வரும் செய்திகளை நம்பாமல், தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதே இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கான முக்கிய வழியாகும்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...