சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை : கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை மாற்றி, சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் புதிய பெயர்களை சூட்ட வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திராவிடர் தளம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, நிவேதா, சரண், மணி உள்ளிட்டோர் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நீக்கி, மாற்றுப் பெயர்கள் சூட்டுவது தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில் சாதி அடையாளங்களை குறிக்கும் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

Advertisement

இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி திமுக அரசு பிறப்பித்த அரசாணையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை விரைந்து மாற்ற வேண்டும். சாதி அடையாளங்கள் இல்லாத வகையில் சமத்துவத்தை பிரதிபலிக்கும் புதிய பெயர்களை சூட்ட வேண்டும்.

Advertisement

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த 630 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கோவையில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...