“பெங்களூர் IT வேலையை விட்டு கஞ்சா வியாபாரம்” : 3 வாலிபர்கள் கைது!

கோவை : கோவை ரத்தினபுரியில் கஞ்சா விற்பனை செய்ததாக முன்னாள் ஐ.டி. ஊழியர் உட்பட 3 பேர் கைது; 1 கிலோ கஞ்சா, 148 சாக்லேட்டுகள் பறிமுதல்.

Advertisement

கோவை மாநகரம் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரி ரோடு சுடுகாடு அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையில் தலைமை காவலர் சாலமன், முதல் நிலை காவலர் பிரபு உள்ளிட்ட தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிரே நிற பிளசர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 148 கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

விசாரணையில் அவர்கள் அபுபக்கர் சித்திக் (25), சர்புதீன் (22), முருகன் (21) என்பது தெரியவந்தது.

இதில் அபுபக்கர் சித்திக் ஏற்கனவே பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், பின்னர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து தனது உறவினரான சர்புதீன் மற்றும் நண்பரான முருகனுக்கும் கஞ்சா பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து மூவரும் கடந்த வாரம் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் பகுதிக்கு சென்று, அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவற்றை கூலித்தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம் வசிக்கும் சாஸ்திரி ரோடு பகுதியில் ரகசியமாக விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...