முதல்வர் வருகை; கோவையில் போக்குவரத்து மாற்றம்!

கோவை: முதலமைச்சர் இன்று மதியம் 12.30 மணிக்கு கோவை விமான நிலையம் வர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களுக்கு மட்டும் மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோவை மாவட்டத்திற்கு மதியம் 12.30 மணியளவில் அவினாசி சாலை வழியாக தாராபுரம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, வாளையார் பகுதியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் பாலத்துறை சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு வழியாக ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம், பப்பம்பட்டி, செலக்கரிச்சல், கரடிவாவி வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிப்புதூர் மற்றும் பப்பம்பட்டி வழியாக சூலூர் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், அன்னூரில் இருந்து அவிநாசி மற்றும் கருமத்தம்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் சோமனூர் வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு கோவை மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...