கோவையில் நள்ளிரவில் கோர விபத்து; சாலையோரத் தூணில் மோதி டிரைவர் பலி

கோவை : கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தூணில் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் ஜாவடுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (32). டிரைவரான இவர், நேற்று முன்தினம் (செப். 28) இரவு சுமார் 11 மணியளவில் கவுண்டம்பாளையம் பகுதியில் காரை ஓட்டிச் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் கண்ணனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றதாக கூறப்படுகிறது. சாலையின் வலதுபுறம் திரும்பிய கார், அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது லேசாக மோதிவிட்டு, சாலையோரத்தில் இருந்த தூண் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், கண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய்யை பார்க்க குவிந்த தவெக தொண்டர்கள்; கையசைத்தபடி சென்ற முதலமைச்சர்

கோவை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக தாராபுரம் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...