கால்பந்து மைதானத்தை பாதுகாக்க கோரி… முதியோர் கால்பந்து சங்கம் மனு!

கோவை: நேரு விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள கால்பந்து மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றும் திட்டத்தை கைவிட கோரி கோவை மாவட்ட முதியோர் கால்பந்து சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அப்போது கோவை மாவட்ட முதியோர் கால்பந்து சங்கத்தினரும் கால்பந்து மைதானத்தை பாதுகாக்க கோரி மனு வழங்கினர்.

இதுகுறித்து சங்கத்தின் பிரதிநிதி மாரியப்பன் கூறுகையில், வ.உ.சி. மைதானம் அருகே அமைந்துள்ள இந்த கால்பந்து மைதானம் கோவையின் பாரம்பரிய விளையாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்கள் இந்த மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் உள்ளிட்ட பலரும் தினசரி இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

ஏற்கனவே விளையாட்டு மைதானங்கள் குறைந்து வரும் சூழலில், இளைஞர்களுக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. இந்த மைதானமும் அகற்றப்பட்டால், கால்பந்து வீரர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பை இழப்பதுடன், எதிர்காலத்தில் திறமையான வீரர்கள் உருவாகும் சூழலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எனவே, கால்பந்து மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றும் திட்டத்தை கைவிட்டு, விளையாட்டு மைதானமாகவே தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை?- கோவை ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை…

கோவை: கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து தனியார்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.