சுகாதார விதிகளை பின்பற்றாத மாடு அறுவை மனை – கோவையில் ரூ.10 ஆயிரம் அபராதம்

கோவை : கோவை காந்திபுரம் பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்பட்டு வந்த மாடு அறுவை மனைக்கு மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Advertisement

கோவை மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் இடங்களை பராமரிப்பது, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்க விடுவது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள மாடு அறுவை மனையில் மாநகராட்சி சுகாதாரக்குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த வளாகம் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

காலை முதல் பாதுகாப்புப் பணி… மதியம் வரை உணவுக்காக காத்திருந்த போலீஸார் – கோவையில் பரபரப்பு

கோவை முதல்வர் விஜய் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவுப் பொட்டலங்களுக்காக அவர்கள் காத்திருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...