வீட்டுச் சாவி இருக்கும் இடம் கொள்ளையர்களுக்குத் தெரிந்ததா? கோவையில் நூதன நகை திருட்டு!

கோவை :வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் தர்மர் (55). இவரது மனைவி ஹேமலதா (50). இவர் காந்திபுரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஹேமலதா தினமும் காலை 9 மணிக்கு வேலைக்குச் சென்று, இரவு 10 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இதனிடையே, அவரது கணவர் தர்மர் வேலை தொடர்பாக கடந்த 3 நாட்களாக கவுண்டம்பாளையத்தில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தையொட்டி ஹேமலதா வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தார். அவரது குழந்தைகளும் நண்பர்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.

Advertisement

இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி மாலை தர்மர் வீட்டிற்குத் திரும்பினார். ஹேமலதா மற்றும் அவரது குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில், இரவு அனைவரும் உணவருந்திவிட்டு உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலை கணவரின் சம்பளப் பணமான ரூ.5 ஆயிரத்தைப் பீரோ லாக்கரில் வைப்பதற்காக ஹேமலதா பீரோவைத் திறந்துள்ளார்.

அப்போது, லாக்கரில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த 2.84 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில், பீரோவில் இருந்த நகைகள் மட்டும் மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஹேமலதா உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, வீட்டின் பூட்டை உடைக்காமல் திருட்டு நடைபெற்றிருப்பதால், வீட்டுச் சாவி வைக்கப்பட்டிருந்த இடத்தை முன்கூட்டியே அறிந்த நபர்கள் யாரேனும் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...