சென்னை விட கோவையில் வெப்பம் அதிகம்! வெப்பத்தில் டாப் 10ல் கோயம்புத்தூர்

கோவை: தமிழகத்தில் நேற்று எங்கு எவ்வளவு வெப்பம் பதிவானது என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

குளிர்காலம் முடிந்து தமிழகத்தில் மெல்ல மெல்ல வெப்பம் அதிகரித்து வருகிறது. கோவையில் இந்த வாரம் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதனிடையே, தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்ப நிலை (டிகிரி செல்சியஸ் அளவில்) பின்வருமாறு:

  • கொடைக்கானல் – 19.2
  • நீலகிரி – 20.8
  • கடலூர் – 29.3
  • நாகை – 30
  • ராமேஸ்வரம் – 30.5
  • சென்னை – 30.5
  • புதுச்சேரி – 30.2
  • தர்மபுரி – 30.2
  • தூத்துக்குடி – 30.3
  • திருத்தணி – 31
  • தஞ்சாவூர் – 31
  • திருச்சி – 31.1
  • பாளையங்கோட்டை – 31.4
  • பரங்கிப்பேட்டை – 30.8
  • கோவை – 32.2
  • சேலம் – 32.5
  • கன்னியாகுமரி – 32.2
  • நாமக்கல் – 33.2
  • மதுரை – 33.2
  • கரூர் – 33.5
  • ஈரோடு – 34.2

இதில் அதிகபட்சமாக நேற்று ஈரோடு மாவட்டத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 19.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

Advertisement

இதில் கோவை 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...