கோவை வணிகவரித்துறையில் லஞ்சம்- கணவன் மனைவி கைது…

கோவை: வணிகவரித்துறையில் லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார்.

Advertisement

வணிகவரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலையில் கணவன் மனைவி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய input tax யை திரும்பி பெற விண்ணப்பித்து இருந்தார்.

அதனை முடித்து கொடுக்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி கேட்டதாக தெரிகிறது. அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்துடன் சென்றுள்ளார். அப்பொழுது உதவி ஆணையர் மகேஸ்வரி , தனசேகரன் என்பவரின் எண்ணை கொடுத்து அவரிடம் பணத்தை கொடுக்கும் படி தெரிவித்துள்ளார். கொடிசியா மைதானம் அருகில் தனசேகரன் இருப்பதாக தெரிவித்த நிலையில் , அங்கு சென்ற அபினேஷ் பணத்தை அவரது காரில் ஏறி அமர்ந்து பணத்தை கொடுத்தார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனசேகரனை பிடித்து விசாரித்த பொழுது அவர் உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனசேகரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் தனசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...