கணவன் மனைவி பிரச்சனை; கோவையில் பட்டப்பகலில் பயங்கரம் !!!

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் பட்டப்பகலில் தர்பூசணி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவர் சரத்குமார், போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் ( வயது 32). இவரது மனைவி பார்வதி தேவி (வயது 26).

Read news: Coimbatore weather: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மழை!

பார்வதி தேவி டி.வி.எஸ் நகர் பெருமாள் கோவில் தெருவில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். சரத்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்து உள்ளார். 

இந்த நிலையில் பார்வதி தேவி மீது சரத்குமாருக்கு திடீரென்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவ்வப்போது குடித்து விட்டு பார்வதி தேவியிடம் சரத்குமார் தகராறு செய்து வந்து உள்ளார். 

Advertisement

இதனால் கடந்த 1 மாதத்திற்கு முன்பு பார்வதி தேவி சரத்குமாரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் பார்வதி தேவி தர்ப்பூசணி கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். 

அப்போது அங்கு வந்த சரத்குமார் அவரிடம் தகராறு செய்து உள்ளார். பிறகு திடீரென்று கத்தியால் அவரை குத்த முயன்று உள்ளார். இதை பார்வதி தேவி தடுத்த போது அவரது கைகளில் கத்தி குத்த விழுந்தது. 

Advertisement

Read news:லிப்ட் கேட்ட பாம்பு; கோவையில் பரபரப்பு; VIDEO உள்ளே…


அவர் வலியால் அலறினார். உடனே அக்கம், பக்கத்தினர் திரண்டு பார்வதி தேவியை காப்பாற்ற முயன்றனர். அப்போது சரத்குமார் மிரட்டி வட்டு அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.

அதன் பிறகு காயம் அடைந்த பார்வதி தேவி அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து பார்வதிதேவி கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...