அறைக்குள் புகுந்து கல்லூரி மாணவர் மீது கொடூர தாக்குதல்! 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை : கோவை இருகூர் பகுதியில் கல்லூரி மாணவரின் அறைக்குள் புகுந்து, அவரை மரக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கியதாக 9 பேர் கொண்ட கும்பல் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20), கோவை இருகூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள வீட்டின் முதல் தளத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனது நண்பர்களான வெங்கடேஷ், ஈஸ்வரமூர்த்தி, ஆஷ்லே மற்றும் பிரகதீஷ் ஆகியோருடன் அரியக்குடி பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது பிரகதீஷின் தங்கச் சங்கிலி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

Also Read: AI வந்தாச்சு… இனி வழக்கறிஞர்களுக்கு சவால்! கோவையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பேச்சு

Advertisement

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு வெங்கடேஷ், வினோத்குமாரை தொடர்பு கொண்டு, தங்கச் சங்கிலியை நீதான் திருடியதாக கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அன்றிரவு சுமார் 11 மணியளவில் வெங்கடேஷ், ஈஸ்வரமூர்த்தி, ஆஷ்லே ஆகிய 3 பேரும் வினோத்குமாரின் அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வீட்டின் உரிமையாளர் ராஜேஷ், அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, நேற்று நள்ளிரவு மேலும் 7 பேருடன் வந்த அந்த கும்பல், வினோத்குமாரின் அறைக் கதவை பலமாகத் தட்டியதாக கூறப்படுகிறது. கதவை திறக்காததால், அங்கிருந்த மரக்கட்டை மற்றும் மண்வெட்டியை பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

Also Read: போலி சான்றிதழ் கொடுத்து ரூ.25.50 லட்சம் மோசடி! 2 ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

பின்னர் வினோத்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கைகளாலும் மரக்கட்டை மற்றும் பீர் பாட்டிலாலும் கை, முதுகு மற்றும் தலை பகுதிகளில் தாக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், வெங்கடேஷ், ஈஸ்வரமூர்த்தி, ஆஷ்லே உள்ளிட்ட 9 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது! தாழ்வான பகுதிகளை கண்காணிக்க கோவை கலெக்டர் உத்தரவு

கோவையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...