கோவையில் வீட்டில் திருட எதுவும் கிடைக்காத ஆத்திரம்… பொருட்களை அடித்து நொறுக்கிய கொள்ளையன்!

கோவை : கோவை ராமநாதபுரத்தில் வீட்டில் திருடுவதற்காக புகுந்த மர்ம நபர், நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் வீட்டில் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என தேடியதாக கூறப்படுகிறது. ஆனால் திருடுவதற்கு குறிப்பிடத்தக்க பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Also Read: AI வந்தாச்சு… இனி வழக்கறிஞர்களுக்கு சவால்! கோவையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பேச்சு

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், வீட்டில் இருந்த பீரோவில் உள்ள பொருட்களை கீழே வீசி நாசம் செய்துள்ளார். மேலும், கட்டில் மற்றும் ஷோகேஸ் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளியதுடன், கட்டையால் மெத்தை, சோபா, வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த நபர், ஆங்கிலத்தில் “SORRY” என எழுதி விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Also Read: அறைக்குள் புகுந்து கல்லூரி மாணவர் மீது கொடூர தாக்குதல்! 9 பேர் மீது வழக்குப்பதிவு

கேரளாவில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் சாலையில் நடந்து செல்லும்போதே வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிடுவதும், பின்னர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை தேடுவதும், ஆத்திரத்தில் பொருட்களை சேதப்படுத்துவதும் பதிவாகி இருந்தது.

தொப்பி அணிந்தபடி வீட்டில் இருந்து அந்த நபர் தப்பிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“திருடன்… திருடன்…” என அலறிய முதியவர்! உக்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்

உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் செல்போன் திருடிய ஒடிசா வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...