கோவையில் பரிதாபம்: முந்திச் செல்ல முயன்றதால் 1 வயது சிறுமி பலி

கோவை: ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அனகா (27). இவரது ஒரு வயது மகள் சுதேசனா.

நேற்று காலை அனகா தனது மகள் சுதேசனாவிற்கு தடுப்பூசி செலுத்த தனது நண்பர் சுதாகர் என்பவருடன் பைக்கில் தொப்பம்பட்டிக்கு சென்றார்.

அங்கு ஒரு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

Advertisement

கணபதி அருகே வந்தபோது, சுதாகர் தன்னுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முயற்சி செய்தார். அதில் தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.

அப்போது சுதேசனா மீது ஜேசிபி வாகனம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுதேசனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமி சுதேசனாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 10,000 மரக்கன்றுகள்- பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.