கோவையில் இதுவரை எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் தெரியுமா? எந்த தொகுதியில் அதிகம்?

கோவை: கோவையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கோவையைப் பொறுத்த வரையில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களில் குவிந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 5 லட்சத்து 5 ஆயிரத்து 843 பேர் வாக்களித்து இருந்தனர்.

11 மணியளவில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்து 59 ஆயிரத்து 871 ஆக உயர்ந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து 380 ஆக உயர்ந்தது.

Advertisement

இதனிடையே காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோவை மாவட்டத்தில் மொத்தமாக 19 லட்சத்து 52 ஆயிரத்து 966 பேர் வாக்களித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ள நிலையில், 3 மணி நிலவரப்படி மொத்தமாக 71.16% பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சூலூர் தொகுதியில் 74.47 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

கோவையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 68.70% பேர் வாக்களித்திருந்த நிலையில், இந்த முறை 3 மணி நிலவரப்படி 74.47% பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குப்பை கொட்டும் பழக்கத்தால் ஆபத்து… கோவை மக்களுக்கு முக்கிய அறிவுரை

கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் கடந்த ஒரு மாதத்தில் தீயணைப்பு துறைக்கு 30 அழைப்புகள் வந்துள்ளன.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.