கோவையில் Strong Room க்கு கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்…

கோவை : சட்டமன்ற பொது தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வரப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று காலை துவங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

அதனை தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள EVM மற்றும் vvpat இயந்திரங்களை பாதுகாப்பாக கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வரப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 3540 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் படிவங்களை வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் சரி பார்த்து சீல் வைக்கப்பட்டு தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்படுகிறது.

Advertisement

பல அடுக்கு பாதுகாப்போடு இயந்திரங்கள் இங்கு வைக்கப்படுகின்றன. மேலும் இங்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே பணிபுரியும் அலுவலர்கள், கட்சியினர் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பரிதாபம்: முந்திச் செல்ல முயன்றதால் 1 வயது சிறுமி பலி

ஜேசிபி முந்திச் செல்ல முயன்ற போது விபத்தில் 1 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Video