தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டுமென வலியுறுத்தி இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன மேலும் நீட் தேர்வை முதன்மையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில் SFI, DYFI, AIYF, AISF அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் நீட் தேர்வு என்பது வணிகமாக்கப்பட்டு விட்டது என்றும் குற்றம் சாட்டினர்.

பாஜக பிரமுகர்களால் வினாத்தாள் கசியப்பட்டுள்ளதாகவும் வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்ட நிலையில் அந்த முகமையை கலைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் பல லட்ச ரூபாய்க்கு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு அது வணிகமாக்கப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

https://www.newscloudscoimbatore.com/national-testing-agency-must-be-dissolved-protest-in-coimbatore/

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அண்ணாமலைக்கு தோல்வி உறுதி- அமைச்சர் அருண்ராஜ் கோவையில் பேட்டி…

கோவை: அண்ணாமலைக்கு தோல்வி நிச்சயம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்மக்கள் தீர்ப்பினை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல்...

Latest News Coimbatore

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.