அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்கு – முன்னாள் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கோர்ட்டில் ஆஜர்!

கோவை: கோவையில் குட்கா தயாரிப்பு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Advertisement

கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று திமுக மாநில தீர்மானக் குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Advertisement

அவருடன் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட பிரதிநிதி மாதப்பூர் தங்கராஜ், ராவத்தூர் செல்வராஜ், பாப்பம்பட்டி பரமசிவம், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், வழக்கறிஞர்கள் மதிவாணன், ராஜமாணிக்கம், ஹேமந்த்குமார், குணசேகரன், ராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...