தொகுதி வாரியாக வெளியான கோவை நோட்டா வாக்கு விவரம்

கோவை:கோவை மாவட்டத்தில் மொத்தம் 11,674 பேர் நோட்டா (NOTA)க்கு வாக்களித்துள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 6 தொகுதிகளையும், திமுக 3 தொகுதிகளையும், அதிமுக ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.

அதிமுகவின் கோட்டை எனக் கருதப்பட்ட கோவையில், கோவை தெற்கு, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனத் தெரிவித்து, 11,674 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

Advertisement

தொகுதி வாரியாக நோட்டா வாக்குகள் விவரம்:

கோவை தெற்கு – 759
கோவை வடக்கு – 1020
கிணத்துக்கடவு – 1717
சிங்காநல்லூர் – 1346
சூலூர் – 1353
கவுண்டம்பாளையம் – 2116
மேட்டுப்பாளையம் – 839
தொண்டாமுத்தூர் – 1000
பொள்ளாச்சி – 849
வால்பாறை – 675

Advertisement

இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 2,116 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.